CINEMA
விபத்தில் சிக்கிய சூர்யா…. உடனடியாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு… அதிர்ச்சி தகவல்…!!
பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவின் 44வது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இந்த படத்தில் சூர்யா இரட்டை படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் தொடங்கி முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது.
அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜூலை 26 ஆம் தேதி முதல் ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் சண்டை காட்சி படமாக்கும் போது நடிகர் சூர்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் படக் குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.