CINEMA
நடிகர் பிரேம்ஜி வீட்டுல விசேஷம்…. மனைவி இந்து போட்ட நச் பதிவு…. இணையத்தில் செம வைரல்…!!
இசையமைப்பாளர், பாடகர் , நடிகர் என்று பல பன்முகத்தன்மை கொண்டவர் பிரேம்ஜி. இவர் சென்னை 600028 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இவர் திருமண வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி ஈரோட்டைச் சேர்ந்த வங்கி ஊழியரான இந்து என்பவரை திருத்தணி முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியின் போது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மனைவி இந்து. மேலும் அந்த வீடியோவிற்கு கேப்ஷனாக முருகப்பெருமானால் வழி நடத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட எங்கள் வாழ்க்கை பயணத்தை தொடங்குகிறோம். என்றும் அன்பு மற்றும் இறைவன் பாதுகாப்போடு ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க தயாராக இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram