CINEMA
நாகசைதன்யா கண்ணியமானவர் …. சமந்தா அப்படிப்பட்டவர்…. நடிகை சோபிதா துலிபா பேட்டி வைரல்..!!
நடிகர் நாக சைதன்யாவிற்கும், நடிகை சோபிதா துலிபாவிற்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. நாகசைதன்யாவின் முன்னாள் மனைவி நடிகை சமந்தா என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இவர்கள் விவகாரத்து ஆகி பிரிந்து விட்டார்கள். இந்த நிலையில் நடிகை சோபிதா துலிபா, நடிகை சமந்தா குறித்து பேட்டி ஒன்றில் கூறிய விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.
அதாவது அந்த பேட்டியில், சமந்தாவின் சினிமா பயணம் சூப்பர் கூல். அவருடைய திரைப்படங்களை எடுத்துப் பாருங்கள். அவர் அதனை கையாண்ட விதம் உண்மையாகவே கூல் என்று கூறியிருக்கிறார். மேலும் தன்னுடைய வருங்கால கணவர் நாகசைதன்யா கண்ணியமானவர் என்றும் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.