அஜித் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லி அசர வைத்த விஜய் மகன்… அப்படி என்ன சொன்னார் தெரியுமா..?? - Cinefeeds
Connect with us

CINEMA

அஜித் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லி அசர வைத்த விஜய் மகன்… அப்படி என்ன சொன்னார் தெரியுமா..??

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் மகன் சஞ்சய் தனது தந்தையை போலவே சினிமாவில் காலடி எடுத்து வைக்க தற்போது தயாராகி வருகின்றார். சமீபத்தில் கூட இவர் ஒரு குறும்படத்தை இயக்கி இருந்தார். அதேசமயம் தற்போது சஞ்சய் தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள நிலையில் இவர் இயக்கம் முதல் படத்தை வைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். முதல் படமே லைகா போன்ற பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் கமிட்டாகி உள்ள சஞ்சய் லைகா நிறுவனர் சுபாஷ்ரணை சந்தித்து அவருடன் எடுத்த புகைப்படங்கள் வைரலானது.

இதற்கு முன்பு சில குறும்படங்களை இயக்கியுள்ள சஞ்சய் தற்போது இயக்குனராக அறிமுகமாகியுள்ளது கோலிவுட்டிற்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆக உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க சஞ்சய் இயக்கம் முதல் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளது யார் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் சஞ்சய் இயக்கம் முதல் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் முதல் திரைப்படம் கமிட்டான நிலையில் சஞ்சய் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அந்தப் பேட்டியில் அஜித் குறித்து அவரிடம் கேட்க, அஜித் என்றால் கெத்து என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்தார். மேலும் எனது அப்பாவை அடுத்து பிடித்த நடிகர்கள் என்றால் அஜித் மற்றும் விஜய் சேதுபதி தான் என்று சஞ்சய் வெளிப்படையாக கூறியுள்ளார்.