CINEMA
காதலருடன் ரகசியமாக நிச்சயதார்த்தத்தை முடித்த ஸ்ரீதேவி மகள்?… உண்மை என்ன?… இணையத்தில் கசிந்த தகவல்..!!

இந்திய திரை உலகில் பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று இவரை கூறலாம். அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாயில் உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து அவரின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக தற்போது இவர் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
தன்னுடைய தாயைப் போலவே தற்போது தென்னிந்திய திரை உலகில் கலக்க தயாராகி விட்டார். இவர் முதன்முதலாக தடக் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் இவர் நடித்து வருகின்றார். இந்நிலையில் ஜான்வி கபூர் சமீபத்தில் தனது காதலர் ஷிகர் பஹாரியாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. அதேசமயம் தனது காதலருடன் பாரம்பரிய உடை அணிந்து சமீபத்தில் திருப்பதிக்கு சென்று வந்த நிலையில் அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியானது.
மேலும் ஜான்வி கையில் ஒரு வைர மோதிரம் இருப்பதை கண்ட ரசிகர்கள் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாக முடிவு செய்துள்ளனர். ஆனால் இவை அனைத்தும் வதந்தி என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சமீபத்தில் தனது அம்மா ஸ்ரீதேவியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரார்த்தனை செய்வதற்காக திருப்பதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
இருந்தாலும் தங்களின் உறவு குறித்து ஜான்வி கபூர் இதுவரை வாய் திறக்கவில்லை. தனது காதலருடன் ஜான்வி கபூர் தற்போது டேட்டிங் செய்வதாக கூறப்படுகிறது. ஜான்வி கபூரின் காதலர் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சுசில் குமார் ஹின்டேவின் தாய்வழி பேரன். இவர் சஞ்சய் மற்றும் ஸ்மிருதி என்ற தம்பதிக்கு பிறந்தவர். இவரின் தந்தை ஒரு தொழிலதிபர் ஆவார்.