காதல் கணவருடன் நடுக்கடலில் பிறந்தநாள் கொண்டாடிய சீரியல் நடிகை ஷபானா.. வைரலாகும் அழகிய புகைப்படம்..!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

காதல் கணவருடன் நடுக்கடலில் பிறந்தநாள் கொண்டாடிய சீரியல் நடிகை ஷபானா.. வைரலாகும் அழகிய புகைப்படம்..!!!

Published

on

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ஷபானா. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனது க்யூட்டான சிரிப்பால் தனக்கென ஒரு இடத்தை பிடித்து பிரபலமானவர்.

ஜீ தமிழில் ஆயிரம் எபிசோடுக்கு மேல் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் கடந்த ஆண்டு நிறைவு பெற்றது. இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட இந்த சீரியல் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஒளிபரப்பான நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.

Advertisement

இந்த சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஷபானா. மேலும் விஜே அக்னி மற்றும் பிரியாராமன் உள்ளிட்ட பலர் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த சீரியலில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ஷபானா சீரியல் நடிகர் ஆர்யனை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர் மீண்டும் சீரியலில் நடிப்பார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அண்மையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் அடிக்கடி ஜோடியாக புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும் ஷபானா தற்போது தனது பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தனது கணவருடன் பிறந்த நாள் கொண்டாடிய சபாநாவின் அழகிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement
Continue Reading
Advertisement