LATEST NEWS
ஜெயிலர் பட வசூலை முறியடிக்க லியோ படக்குழு போட்ட மாஸ்டர் பிளான்… இது வேற லெவலில் இருக்கே..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே விஜய் தன்னுடைய பகுதியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டிற்கு தனது குடும்பத்துடன் ஓய்வெடுக்க சென்றுள்ளார்.
இந்தநிலையில் சமீபத்தில் வெளியான ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் 525 கோடி வசூல் குவித்து மாபெரும் சாதனை படைத்துள்ள நிலையில் ஜெயிலர் வசூலை முறியடிப்பதற்கு லியோ பட குழு திட்டமிட்டுள்ளது. அதாவது ஏற்கனவே ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கான மோதல் சமீப காலமாக வெடித்து வரும் நிலையில் தற்போது ரஜினியின் ஜெயிலர் வசூல் சாதனையை முறியடிப்பதற்கு லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் பல வாரங்கள் முன்பாகவே அதாவது செப்டம்பர் நான்காம் தேதி டிக்கெட் முன்பதிவு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக ஒரு படத்திற்கான டிக்கெட் முன்பதிவு என்பது ஒரு நாளுக்கு முன்பாக தொடங்கும் நிலையில் தற்போது லியோ பட குழு வசூல் சாதனையை முறியடிப்பதற்காக மாபெரும் வசூலை குவிக்கும் திட்டத்தில் செப்டம்பர் 4ஆம் தேதி முன்கூட்டியே முன்பதிவு டிக்கெட்டை வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் லியோ மாபெரும் வசூல் சாதனை படைக்கும் எனவும் தெரிகிறது.