CINEMA
“ஆடி வந்தேன் ஆடி வந்தேன்” தலையில் குடத்தோடு ஆபாச நடிகை மியா கலீஃபா…. இளசுகள் செய்த சேட்டை…!!
முன்னாள் ஆபாச பட நடிகையான மியா கலிஃபா தலையில் குடத்தை வைத்து அம்மனுக்கு பால்குடம் எடுப்பது போன்று கோவில் திருவிழாவுக்கு இளைஞர்கள் சிலர் பேனர் வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் ஆலயத்தில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற இருந்தது.
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் திருவிழாவிற்கு அடித்த பேனரில் நடிகை மியா கலிஃபா பால்குடம் எடுப்பது போன்ற புகைப்படத்தை அச்சடித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் ஷாக் ஆகினர். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.