“டிரம்பைக் கொல்வோம்” சவப்பெட்டியில் அமெரிக்க அதிபர் பிணமாகக் கிடப்பது போல் பிரம்மாண்ட போஸ்டர்… உலகையே உலுக்கும் ஈரானின் பகீர் மிரட்டல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“டிரம்பைக் கொல்வோம்” சவப்பெட்டியில் அமெரிக்க அதிபர் பிணமாகக் கிடப்பது போல் பிரம்மாண்ட போஸ்டர்… உலகையே உலுக்கும் ஈரானின் பகீர் மிரட்டல்..!!

Published

on

ஈரான் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியான எங்ஹேலாப் சதுக்கத்தில் , அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சவப்பெட்டியில் பிணமாகக் கிடப்பது போன்ற பிரம்மாண்டமான விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் படத்தின் பின்னணியில், “நாங்கள் டிரம்பைக் கொல்வோம்” என்ற நேரடி மிரட்டல் வாசகங்கள் பாரசீக மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. பிப்ரவரி மாத இறுதியில் நடந்த அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் நினைவாகவும், இந்த போரின் தொடர்ச்சியாகவும் இந்த விளம்பரப் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகளுக்கு எதிராக ஈரான் போர் தொடுத்ததில் இருந்து, பொதுவெளிகளைத் தங்களது அரசியல் மற்றும் சித்தாந்தப் பிரச்சாரக் களமாக ஈரான் அரசு தீவிரமாகப் பயன்படுத்தி வருகிறது. இந்த புதிய விளம்பரப் பலகையில், டிரம்ப் ஒரு கருப்பு நிற சவப்பெட்டிக்குள் கலைந்த தலைமுடியுடன், மூடிய கண்கள் மற்றும் வாயோடு, சிவப்பு நிற டை அணிந்தபடி இருப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும், போரின் ஆரம்பத்தில் மினாப் நகரில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான குழந்தைகளுக்கு நீதி கேட்கும் வாசகங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

Advertisement

ஈரானில் இது போன்ற அமெரிக்க எதிர்ப்பு விளம்பரப் பலகைகள் வைக்கப்படுவது புதிய விஷயமல்ல என்றாலும், இம்முறை டிரம்ப் மீதான கொலை மிரட்டல் மிகவும் வெளிப்படையானதாக அமைந்துள்ளது. அண்மையில் ஈரானின் பழமைவாத செய்தித்தாள் ஒன்று, தங்கள் தலைவர்களின் மரணத்திற்குப் பழிவாங்கப்பட வேண்டிய 13 உலகத் தலைவர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆகியோரின் பெயர்கள் முதன்மையாக இடம்பெற்றிருந்த நிலையில், இந்த விளம்பரப் பலகை விவகாரம் அமெரிக்க-ஈரான் இடையேயான பதற்றத்தை மேலும் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in