LATEST NEWS
“ரியல் ஹீரோயின்னா இவங்கதான்..!” ஆட்டோ சீட்டில் குழந்தையை வைத்து போராடும் தாய்… நெட்டிசன்களை உரையவைத்த உணர்ச்சிப்பூர்வமான நிஜக் கதை..!!
மும்பையின் பரபரப்பான வீதிகளில் ஓடும் ஓர் ஆட்டோவில், ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அவளது மூன்று வயது மகள் ஏதோ ஒன்றைக் கடித்துச் சாப்பிட்டபடி அமர்ந்திருக்கிறாள். அவள்தான் கோமல் கெய்க்வாட். குழந்தையின் 18-வது மாதத்தில் கணவன் இவளை விட்டுப் பிரிந்து சென்று திரும்பவே இல்லை. வேலை தேடிச் சென்ற இடங்களில் எல்லாம் “குழந்தையுடன் வேலை தர முடியாது” என நிராகரிக்கப்பட்டதால், “நானே ஆட்டோ ஓட்டுகிறேன்; என் மகளும் என் கண்ணெதிரிலேயே இருப்பாள்” எனத் தைரியமாக இத்தொழிலில் இறங்கினாள்.
माँ ♥️
मुंबई की रोड पे एक ऑटो चलती है और बगल की सीट पे उसकी तीन साल की बेटी बैठी होती है कुछ खाते हुए,
ये है कोमल गायकवाड़ जब बेटी सिर्फ 18 महीने की थी तब पति छोड़कर चला गया,
नौकरी ढूंढने निकली तो हर जगह से एक ही जवाब मिला बच्ची साथ है तो काम नहीं दे सकते,
तो सोचा चलो खुद… pic.twitter.com/YzqYG80APL— Rahul Kumar (@MukAn_X) August 6, 2026
காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை வீதிகளில் ஆட்டோ ஓட்டும் கோமலுக்கு, வீட்டு வாடகை முதல் அனைத்துச் செலவுகளும் அவள் தோள்களிலேயே உள்ளன. பார்த்துக்கொள்ள ஆள் இல்லாததால் குழந்தை பெரும்பாலான நேரம் ஆட்டோவின் பின் இருக்கையிலேயே தூங்கிவிடுகிறது. “எனக்கென்று ஒரு சிறிய வீடு கட்ட வேண்டும். என் மகளை நன்றாகப் படிக்க வைத்து IPS அதிகாரியாக்க வேண்டும்” என்பதே இவளது ஒரே கனவு. இத்தனை போராட்டங்களுக்கு இடையிலும் தளராமல் போராடும் கோமல், மும்பையின் நிஜமான வீரத்தாய்.
