LATEST NEWS
“செம்ம மாஸ் ஓட்டுநர்.. நடுரோட்டில் மயங்கிக் கிடந்த போதை ஆசாமி… வேகமாக வந்த பேருந்து… ஓட்டுநர் செய்த காரியத்தைப் பாருங்க.. சோஷியல் மீடியாவை உரையவைத்த 30 வினாடிகள்!
வேமுலவாடா நோக்கிச் செல்லும் சாலையில் பார்ப்போரை உறைய வைக்கும் திகிலூட்டும் காட்சி ஒன்று அரங்கேறியுள்ளது. அளவுக்கு அதிகமாக மது அருந்திய நபர் ஒருவர், தன் சுற்றப்புற நினைவின்றிச் சாலையின் நடுவே மயக்க நிலையில் விழுந்து கிடந்துள்ளார். அந்தச் சமயத்தில், தொலைவில் இருந்து பேருந்து ஒன்று அதிவேகமாக வந்துகொண்டிருந்ததால், கொடூரமான விபத்து நடந்துவிடுமோ என்ற அச்சமும் பதற்றமும் அங்கு நிலவியது.
A frightening scene unfolds on a road leading to Vemulawada. A heavily intoxicated man is lying unconscious in the middle of the road, completely unaware of the danger around him. As a bus approaches from a distance, the situation appears terrifying, and it seems like a tragic… pic.twitter.com/jRAdNn9NDC— Karnataka Portfolio (@karnatakaportf) August 6, 2026
எனினும், சாலையின் நடுவே கிடந்த நபரைச் சமயோசிதமாகக் கவனித்த பேருந்து ஓட்டுநர், பதற்றமடையாமல் சாதுரியமாகச் செயல்பட்டார். அந்த நபருக்கு மிக அருகில் ஆபத்தான முறையில் பேருந்தை இயக்க முற்படாமல், வாகனத்தைச் சாலையின் ஓரத்திற்கு மிகக் கவனமாகத் திருப்பிச் செலுத்தினார். தன் முழுத் கட்டுப்பாட்டுடன் பேருந்தை இயக்கி, ஆபத்தான நிலையில் கிடந்தவர் மீது மோதாமல் பேருந்தை வெற்றிகரமாக விலக்கிச் சென்று மாபெரும் விபத்தைத் தவிர்த்தார்.
