LATEST NEWS
எப்புட்றா.! “இங்கு குப்பை போடாதே.. “மீறினால் செய்வினை வைக்கப்படும்” வினோதமான எச்சரிக்கை பலகை… இணயத்தில் செம வைரல்…!!
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பாரதியார் தெருவில், “இங்கு குப்பைகளைக் கொட்டக்கூடாது; மீறினால் செய்வினை செய்யப்படும்” என்று ஆபத்தை குறிக்கும் மண்டை ஓடு சின்னத்துடன் வினோதமான எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் தொடர்ந்து குப்பை கொட்டப்படுவதைத் தடுக்க, அப்பகுதி மக்கள் இந்த நூதன மற்றும் விசித்திரமான வழியைக் கையாண்டுள்ளனர். பொதுவாக அபராதம் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கைகளுக்கு மக்கள் அஞ்சாததால், செய்வினை மற்றும் மாந்திரீகம் போன்ற மூடநம்பிக்கை பயத்தை ஏற்படுத்தி குப்பை கொட்டுவதைத் தடுக்க இந்த பலகை வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த விசித்திரமான மற்றும் கடுமையான எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் மக்கள் தொடர்ந்து அதே இடத்தில் குப்பைகளை வீசிச் செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த எச்சரிக்கை பலகைக்கு நேர் கீழேயே குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதை இந்த புகைப்படம் காட்டுகிறது. இந்த வினோத செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது.
