CINEMA
வசூல் வேட்டையில் ஜவானை முந்திய “கல்கி2898 AD”…. எவ்வளவு தெரியுமா…??
பிரபாஸ், கமலஹாசன், அமிதாபச்சன், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான திரைப்படம் “கல்கி 2898 AD” இந்த திரைப்படம் இந்த திரைப்படம் வசூலில் ஷாருக்கானின் ஜவான் படத்தை முந்தி புதிய சாதனை படைத்துள்ளது. படத்தின் இந்திய வசூல் ஆனது 760 கோடி ரூபாயை 40 நாட்களில் இந்த கல்கி திரைப்படம் வசூல் செய்து கலக்கியுள்ளது.
மேலும் ஹிந்தியில் சுமார் 350 கோடியும், தெலுங்கில் 335 கோடியும் , தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சுமார் 75 கோடியும் வசூலை குவித்துள்ளது. இதனால் வசூல் வேட்டையில் கல்கி திரைப்படம் ஜவான் திரைப்படத்தை முந்தி உள்ளது. படம் வெளியான 3 நாள்களில் உலகளவில் 415 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.