CINEMA
தெறிக்க விடும் தல…! ரூ.9 கோடிக்கு புது கார் வாங்கிய அஜித்… வெளியான மாஸ் வீடியோ…!!
தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவர் அஜித். இவர் தற்போது மற்றும் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என்ற இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரு திரைப்படங்களின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் காலையில் விடாமுயற்சி படிப்பை முடித்துவிட்டு மாலையில் குட் பேட் அக்லி படத்தின் நடித்து வருகிறாராம் அஜித். விடாமுயற்சி படம் தீபாவளி அன்று வரும் என்று கூறப்படுகிறது.
அதேபோல குட் பேட் அக்லி அடுத்த வருடம் பொங்கலுக்குவெளி வரும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் அஜித் பைக் மற்றும் கார் மீது அதிக காதல் வைத்திருப்பது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் தான் ஒன்பது கோடி விலை உள்ள ferrari கார் ஒன்றை புதிதாக அஜித் வாங்கி இருந்தார். அதன் புகைப்படம் கூட இணையத்தில் வெளியானது.
இந்த நிலையில் அஜித் தன்னுடைய காரை வாங்கும்பொழுது எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .மேலும் அதை மாஸாக ஓட்டி பார்க்கும் வீடியோ வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
EXCLUSIVE : THALA #AjithKumar Recent Unseen Video 😊😊#VidaaMuyarchi #GoodBadUgly pic.twitter.com/6M0WI8Xq9q
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) August 7, 2024