CINEMA
Alert-ஆ இருங்க….! இந்த தகவலை யாரும் நம்ப வேண்டாம்… எச்சரிக்கை விடுத்த லைகா நிறுவனம்…!!
தென்னிந்திய திரை உலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனம் லைக்கா. இந்த நிறுவனம் பல பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் புதிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வழங்குவதாக கூறும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று அந்த நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லைகாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக பலர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அழைப்புகளை விடுப்பது எங்கள் கவனத்திற்கு வந்திருக்கிறது.
லைகா தயாரிக்கும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அல்லது ஆடிஷன் குறித்த அறிவிப்புகள் எங்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியாகும். நாங்கள் அறிவிக்காத ஆடிஷன் மற்றும் வாய்ப்பு வழங்குவதாக கூறும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். எச்சரிக்கையாக இருங்கள் என்று தெரிவித்துள்ளது.