CINEMA
G.O.A.T’ வசூல் எவ்வளவு தெரியுமா….? படக்குழு அதிகாரப்பூர்வ தகவல்….!!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி கடந்த 5 ஆம் தேதியன்று வெளிவந்த திரைப்படம் GOAT. வெங்கட் பிரபு முதன் முறையாக நடிகர் விஜய்யுடன் கைகோர்த்த நிலையில் ரசிகர்கள் படத்தின் மீது எதிர்பார்ப்பை வைத்திருந்தனர் . யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய்யுடன் சேர்ந்து பிரசாந்த், பிரபுதேவா சினேகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் அனைவருமே நடித்திருந்தனர். இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது .
முதல் நாளில் இப்படம் 126 கோடி வசூலித்திருந்த நிலையில், 4 நாள்களில் 288 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் விரைவில் இந்த படத்தின் வசூல் 500 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.