CINEMA
ஆஹா..! முதல் படமே மாஸா இருக்கும் போலயே..! ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் ஸ்பெஷல் வீடியோ வைரல்..!!

இயக்குனரும், நடிகருமான எஸ்ஏ சந்திரசேகர் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கி ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு நிறைய நல்ல நல்ல படங்களும் கொடுத்தார். அவருடைய மகன் விஜய் ஹீரோவாக அறிமுகம் ஆகி ஆரம்பத்தில் மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் தன்னுடைய கடின உழைப்பின் மூலமாக பாக்ஸ் ஆபிஸ் கிங்காக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தன்னுடைய 69 ஆவது படத்தோடு இனி நடிக்கப் போவதில்லை என்றும் முடிவு எடுத்த அவர் அரசியல் களமிறங்கியுள்ளார். விஜயின் மகன் சஞ்சய் அப்பாவை போல ஹீரோவாக விருப்பம் இல்லாமல் தாத்தாவைப் போல இயக்குனராக களம் இறங்கியுள்ளார். லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் தன்னுடைய முதல் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். இந்நிலையில் இன்று இந்த படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன் பிறந்தநாள் என்பதால் அதற்கான ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளார்கள் படக்குழு. அது இணையத்தில் வைரலாகி வருகிறது.