CINEMA
விஜய்க்கு இவ்ளோ கோவம் வருமா…? ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்…. ஓப்பனாக பேசிய VP…!!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் GOAT. இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது .வெங்கட் பிரபு முதன் முறையாக நடிகர் விஜய்யுடன் கைகோர்த்த நிலையில் ரசிகர்கள் படத்தின் மீது எதிர்பார்ப்பை வைத்திருந்தனர் . யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய்யுடன் சேர்ந்து பிரசாந்த், பிரபுதேவா சினேகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் அனைவருமே நடித்திருந்தனர்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு, விஜய்யின் கோபம் குறித்து பேசி உள்ளார். ஒரு சண்டைக்காட்சி படமாக்கும் பொழுது விஜய் மேக்கப் மேனிடம் பிளட் ஸ்டைன் கேட்டுள்ளார். ஆனால் அந்த நேரத்தில் மேக்கப் மேன் அது இல்லை என்று கூறியதால் விஜய் மேக்கப் மேனை பார்த்து கடுமையாக முறைத்துள்ளார்.
இதை பார்த்து வெங்கட் பிரபு உட்பட படப்பிடிப்பு தளத்தில் இருந்து அனைவருமே பயந்துவிட்டார்கள். சில நிமிடங்களுக்கு அளித்து விஜய் பிரேக் விட்ட பிறகு எடுக்கலாமா? என்று அமைதியாக கேட்டாராம். என்னதான் விஜய் கோபத்தில் கத்தவில்லை என்றாலும் அவருடைய அமைதி ஒருவித பயத்தை ஏற்படுத்தியதாக வெங்கட் பிரபு கூறி இருக்கிறார்.