CINEMA
நல்லபடியாக முடிந்தது…. பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா வெளியிட்ட போட்டோ…. வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்…!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்தான் சம்யுக்தா. இவர் ஏற்கனவே சந்திரகுமாரி சீரியலில் நடித்தவர். ஆனால் அது பலருக்கும் தெரிந்ததே இல்லை.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது. இவர் பிரபல தொகுப்பாளினியான பாவனாவின் உடன் பிறந்த சகோதரி ஆவார்.
அதன் மூலமாகவே இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் சொந்தமாக வீடு ஒன்றை கட்டி பால் காய்ச்சியுள்ளார். இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram