CINEMA
அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால் செருப்பால அடிப்பேன் டா நாயே…. பரபரப்பை கிளப்பிய பிக்பாஸ் பிரபலம்…!!

தமிழ் சினிமா துறையிலும் பாலியல் தொல்லை தரப்படுவதாக, நடிகை ஷனம் ஷெட்டி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மலையாள சினிமாவில் மட்டும் பாலியல் தொல்லை கிடையாது. தமிழ் சினிமாவிலும் பாலியல் ரீதியான தொல்லைகள் இருக்கிறது. என்னிடம் யாராவது அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால் செருப்பால அடிப்பேன் டா நாயே என்று தைரியமாக சொல்லுவேன் என்று பத்திரிக்கையாளர் முன்பாக நடிகை சனம் ஷெட்டி ஆவேசமாக பேசியுள்ளார்.
மலையாள சினிமாவில் நடக்கும் அவலங்கள் குறித்து, நீதிபதி ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கைக்கு நன்றி தெரிவித்த அவர், பட வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட் என்ற நிலை தமிழ் சினிமாவிலும் இருப்பதாக சாடினார். பிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரபலமான ஷனமின் இந்த கருத்து, தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.