CINEMA
அட்ராசக்க…! 50+மில்லியன் பார்வைகளை கடந்த G.O.A.T டிரெய்லர்…. அலப்பறையை கிளப்பும் ரசிகர்கள்…!!

வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கோட். இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி அதிக லைக்குகள், பார்வைகளைப் பெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று 3 மொழிகளிலும் சேர்த்து தற்போது வரை 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இதை கொண்டாடும் விதமாக புதிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரெய்லர் தமிழில் மட்டும் 42 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.