CINEMA
டிரெய்லர் பாத்ததும் உடனே அஜித்திடமிருந்து அந்த மெசேஜ் வந்துச்சு…. VP ஓபன் டாக்…!!
நடிகர் விஜய் நடிப்பில் , இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் G.O.A.T. இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியாகியுள்ளது. இதில் மாஸான என்ட்ரி கொடுக்கும் விஜய், வித்தியாசமான கெட்டப்பில் அசத்தி இருக்கிறார். இயக்குனர் வெங்கட் பிரபு சென்னையில் செய்தியாளர் சந்தித்து பேசினார்.
அப்பொழுது அஜித் சார் படத்தின் டிரெய்லரை பார்த்துவிட்டு என்ன சொன்னார் என்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் , அஜித் சார் டிரைலரை பார்த்துவிட்டு சூப்பரா இருக்குடா . விஜய்க்கும், பட குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் சொல்லிருடான்னு மெசேஜ் பண்ணினார்.