CINEMA
imax-ல் விஜய்யின் “தி கோட்”…. ரசிகர்களுக்கு டபுள் டிரீட் கொடுத்த படக்குழு…. செம ஹேப்பி…!!
இயக்குனர் வெங்கட் பிரபு நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கோட். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து வருகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
படத்தின் டிரைலர் ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கோட் படத்தின் புதிய போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. அதில் கோட் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கோட் படத்தின் புதிய அப்டேட்டுன் படத்திற்கான போஸ்டரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். மேலும் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் எப்பொழுது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.
It’s #TheGreatestOfAllTime experience in IMAX from #Sep5th@actorvijay Sir
A @vp_offl Hero
A @thisisysr Magical #TheGreatestOfAllTime#ThalapathyIsTheGOAT#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh @Ags_production@archanakalpathi @aishkalpathi @actorprashanth… pic.twitter.com/4uBKihcYKu— Archana Kalpathi (@archanakalpathi) August 8, 2024