CINEMA
G.O.A.T படத்திற்கு வந்தது புதிய சிக்கல்…. திரையிடுவதை தடுக்க வேண்டுமென புகார்…!!
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் கோட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்போடு வெளியாக இருக்கிறது. செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா,உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
இந்த நிலையில் இந்த படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கோரி சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். மேலும் திரையரங்குகளில் திரையிடுவதை தடுக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளார்.