CINEMA
“தங்கலான்” வெற்றி கொண்டாட்டம்…. தடபுடல் விருந்து வைத்த நடிகர் விக்ரம்…!!!
நடிகர் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தங்கலான்.இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
இதுவரை உலகளவில் 100 கோடி வசூலை கடந்துள்ளது. இந்தி மொழியில் தங்கலான் திரைப்படம் முப்பதாம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சியான் விக்ரம் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருந்து வைத்தார். அதில் அவரே பலருக்கும் பரிமாறி வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.