CINEMA
“காந்தி” என்று பெயர் வைத்தால் சரக்கு அடிக்கக்கூடாதா…? அதை சொல்லி தப்பித்த வெங்கட் பிரபு…!!
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் G.O.A.T திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகியுள்ளது. இதில் மாஸான என்ட்ரி கொடுக்கும் விஜய், வித்தியாசமான கெட்டப்பில் அசத்தி இருக்கிறார். அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் வரும்போது யுவன் சங்கர் ராஜாவின் BGM செம மிரட்டலாக இருக்கிறது. தற்போது படத்தின் சென்சார் வேலைகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னையி செய்தியாளர்களை சந்தித்து பேசிய வெங்கட் பிரபுவிடம் படத்தில் விஜய்க்கு காந்தி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் டிரெய்லர் பார்க்கும்போது குடிக்கிறாரே என்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், காந்தி என்று பெயர் வைத்தால் சரக்கு அடிக்கக்கூடாதா? மகாத்மா காந்தி பெயர் கிடையாது. என் நண்பனின் பெயர் கூட காந்தி தான். என்று கூறியுள்ளார்.