CINEMA
G.O.A.T படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்…? SK ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்…!!
நடிகர் விஜய்யின் 68 வது படமான கோட் படம் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, சினேகா, பிரசாத் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளார்கள்.
இந்த படத்தில் இடம் பெற்றுள்ள விசில் போடு, சின்ன சின்ன கண்கள், தி ஸ்பார்க் அழகிய பாடல்கள் வெளியாகி கலையான விமர்சனத்தை பெற்ற நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.