CINEMA
இன்னும் நாகசைதன்யாவை மறக்காத சமந்தா…. கண்டுபிடித்த இணையவாசிகள்…. வைரலாகும் புகைப்படம்…!!
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகர் சமந்தாவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுடைய திருமணம் நான்கு வருடங்களுக்கு பிறகு முடிவுக்கு வந்தது. தற்போது இருவரும் விவகாரத்தை பெற்று பிரிந்து விட்டார்கள். இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சோபிதாவை நாகசைதன்யா நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இது குறித்த புகைப்படங்களும் வெளியானது . மேலும் திருமணம் குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர் .
நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியானதில் இருந்து பல சர்ச்சையான கருத்துக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் சமந்தாவின் ரசிகர் ஒருவர் சம்மந்தா இன்னும் நாகசைதன்யாவை மறக்கவில்லை என்பதை உறுதி செய்துள்ளார். அதாவது விவகாரத்திற்கு பிறகு நாக சைதன்யாவோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நீக்கிய சமந்தா கடந்த 2018 ஆம் வருடம் நாக சைதன்யாவுடன் ஒரு ரேஸ் காருக்கு பக்கத்தில் இருந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்னும் நீக்காமல் வைத்துள்ளார். இதை பார்த்த சமந்தா ரசிகர்கள் வருத்தமான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது