கல்யாணம் ஆகிடுச்சா…? கழுத்தில் தாலி, நெற்றியில் குங்குமம்…. சரண்யாவை வாழ்த்தும் ரசிகர்கள்…!! - cinefeeds
Connect with us

CINEMA

கல்யாணம் ஆகிடுச்சா…? கழுத்தில் தாலி, நெற்றியில் குங்குமம்…. சரண்யாவை வாழ்த்தும் ரசிகர்கள்…!!

Published

on

தொடக்கத்தில் செய்தி வாசிப்பாளர் மற்றும் செய்தி தொகுப்பாளராக இருந்தவர்தான் சரண்யா துராத்தி . அதன் பிறகு நெஞ்சம் மறப்பதில்லை போன்ற சீரியல்களில் நடித்தார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டு சீரியலில் மூத்த மருமகளான தங்கமயில் என்ற கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார். சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.  இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி விரதம் ஆரம்பமானது.

இந்த விரதத்தை சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் விமர்சையாக கொண்டாடினர். அந்த வகையில் நடிகை சரண்யா வரலட்சுமி பூஜை முடித்துவிட்டு மஞ்சள் தாலியுடன் நெற்றியில் குங்குமத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் “லைஃபில் முதல் வரலட்சுமி பூஜை அவருடன்” என்றும் பகிர்ந்துள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் சரண்யாவிற்கு ராகுலுக்கும் திருமணம் ஆனதை உறுதி செய்து வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by SHARANYA TURADI (@sharanyaturadi_official)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement