LATEST NEWS
“இந்த வயசுல நாடகமாடாதீங்க..!” ஆர்.பி.உதயகுமாருக்கு த்ரிஷா கொடுத்த காட்டமான பதிலடி..? இணையத்தைக் கலக்கும் இன்ஸ்டா ஸ்டோரி..!!
நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இந்த வயதில் நாடகமாடுவது அசிங்கமானது… பணம் சம்பாதித்து நிம்மதியைத் தேடுங்கள்” என்று பதிவிட்டிருந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சமீபத்தில் அதிமுக மூத்த தலைவர் ஆர்.பி.உதயகுமார், த்ரிஷாவை துணை முதலமைச்சராக்கத் திட்டமிட்டுள்ளதாகப் பேசிய பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே த்ரிஷா இந்த காட்டமான பதிவை வெளியிட்டுள்ளதாக நெட்டிசன்களும் அரசியல் வட்டாரத்தினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாகத் தனது தனிப்பட்ட கருத்துகளை சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாகப் பதிவிடாத த்ரிஷா, திடீரெனக் காட்டமான சொற்களைப் பயன்படுத்திப் பதிவிட்டிருப்பது ஆர்.பி.உதயகுமாரின் பேச்சைத் தீவிரமாகக் கண்டிப்பதாகவே பார்க்கப்படுகிறது. அரசியல் ஆதாயத்திற்காகத் தனது பெயரைத் தேவையின்றி இழுப்பதைத் தவிர்க்கவே, மறைமுகமாகத் த்ரிஷா இந்த ரியாக்ஷனைக் கொடுத்துள்ளார் என்று தகவல்கள் உலவி வருகின்றன.
