LATEST NEWS
“இனியும் தாமதப்படுத்தக் கூடாது!” 33% மகளிர் இடஒதுக்கீட்டை உடனே அமல்படுத்துங்க… வீட்டுப் பெண்கள் உயர்ந்தால்தான் நாட்டிற்கு பெருமை… முதல்வர் விஜய் அதிரடி..!!
“பெண்கள் அதிகாரம் பெறும்போதுதான் குடும்பமும் நாடும் உண்மையான வளர்ச்சியை அடையும். எனவே, பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டைச் சட்டமாக்கி இனியும் தாமதப்படுத்தாமல் மத்திய அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” எனத் தமிழக முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார். மகளிர் அமைப்புகள் மற்றும் பெண் ஆளுமைகளை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், பெண் உரிமைகள் மற்றும் சமூகத்தில் அவர்களின் பங்களிப்பு குறித்துத் தன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
விழாவில் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், “இன்று இந்த விஜய்க்குச் சமூகத்தில் கிடைத்திருக்கும் இந்த உயரத்திற்கும் இடத்திற்கும் முழு முதற் காரணமே என்னுடைய அம்மா, பாட்டி, அக்கா மற்றும் தங்கைகளாகிய பெண்கள்தான். ஒரு வீட்டின் பெண்கள் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் உயரும்போதுதான், அது அந்த வீட்டிற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டிற்கே பெருமையையும் புகழையும் சேர்க்கும்” எனத் தனது குடும்பத்துப் பெண்களையும் ஒட்டுமொத்த மகளிர் சமூகத்தையும் நினைவுகூர்ந்து நெகிழ்ச்சியுடன் பேசினார்.
வரலாறு முழுவதும் சாதனை படைத்த பல்வேறு முன்னணிப் பெண் ஆளுமைகளைச் சுட்டிக்காட்டிப் பெருமிதம் தெரிவித்த அவர், ஒரு பெண் அதிகாரம் பெறும்போது அந்த முழு குடும்பமும் உயர்கிறது என்றும், ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாரப் பொறுப்புகளுக்கு வரும்போது அந்த நாடே பெரு வளர்ச்சியடையும் என்றும் குறிப்பிட்டார். பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய 33% இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதே மகளிர் அதிகாரமளித்தலின் முதல் படியாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
