#BREAKING: VIP, VVIP-க்காக ரூ.6.85 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

#BREAKING: VIP, VVIP-க்காக ரூ.6.85 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை..!!

Published

on

தமிழகத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களைத் தவிர்த்து, பிற முக்கிய விஐபி (VIP) மற்றும் விவிஐபி (VVIP) பிரமுகர்களின் வருகையின் போது மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய செலவினங்களுக்காக ஓராண்டுக்கு ரூ.6.85 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீடானது மாவட்டங்களின் வகைகளுக்கு ஏற்பப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘ஏ’ பிரிவில் உள்ள கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்குத் தலா ரூ.25 லட்சமும், ‘பி’ பிரிவில் உள்ள நெல்லை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்குத் தலா ரூ.20 லட்சமும், ‘சி’ பிரிவில் உள்ள மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் தலா ரூ.15 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in