“கலெக்டர் செய்த வெட்கக்கேடான செயல்..!” முன்னாள் மேலாளரை வெறும் கையால் கழிப்பறை கழுவ வைத்தக் கொடூரம்.. இணையத்தை உலுக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கலெக்டர் செய்த வெட்கக்கேடான செயல்..!” முன்னாள் மேலாளரை வெறும் கையால் கழிப்பறை கழுவ வைத்தக் கொடூரம்.. இணையத்தை உலுக்கும் வீடியோ..!!

Published

on

சத்தீஸ்கர் மாநிலம் சத்தி மாவட்டத்தில், கலக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நெல் கொள்முதல் குறித்த ஆய்வுக் கூட்டத்தின் போது, முன்னாள் மேலாளர் ஒருவரை அங்கிருந்த கழிப்பறையைத் தூய்மை செய்ய வைத்த கலக்டரின் செயல் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. எவ்வித துப்புரவு உபகரணங்களோ, பிரஷ்ஷோ அல்லது கிருமிநாசினியோ வழங்கப்படாமல், வெறும் கையாலேயே கலக்டர் சாப் முன்னிலையில் அந்த முன்னாள் மேலாளர் கழிப்பறையைச் சுத்தம் செய்யப் பணிக்கப்பட்டுள்ளார்.

छत्तीसगढ़ के सक्ती में कलेक्टर साहब ने पूर्व प्रबंधक से ऑफिस का शौचालय साफ करवाया है। धान खरीदी की बैठक के बीच में कलेक्ट्रेट का शौचालय साफ कराया गया है। ब्रश या कोई सफाई का सामान भी नहीं दिया गया। सिर्फ खाली हाथ से काम करवाया गया है। बेहद शर्मनाक घटना। pic.twitter.com/d5vJHhmQR6— Er Manish Rajak (@ManishCEO2) August 12, 2026

அரசு உயர் அதிகாரி ஒருவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, எந்தவொரு தற்காப்புக் கருவிகளும் இன்றி ஒரு மனிதரை வெறும் கையால் கழிப்பறையைத் தூய்மை செய்ய வைத்த இந்தச் சம்பவம், மனித உரிமைகளையும் மனித கண்ணியத்தையும் மிதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இணையத்திலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தச் செயல், மிகவும் வெட்கக்கேடான மற்றும் கண்டிக்கத்தக்க நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in