LATEST NEWS
செம குட் நியூஸ்..! குடும்பத் தலைவிகளுக்கு கூடுதலாக ரூ.8,625… தமிழக அரசு எடுத்த சூப்பர் முடிவு..!!
தமிழ்நாட்டில் கிராமப்புற ஏழை எளிய நலிவுற்ற குடும்பங்களுக்கு கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், கூடுதலாக 25 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கிடும் ‘வெற்றி 150’ திட்டத்திற்காக ₹100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் புதிய VB-G RAM-G சட்டத்தின்படி ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வந்த நிலையில், தகுதியான நலிவுற்ற குடும்பங்களுக்கு மாநில அரசின் சொந்த நிதியிலிருந்து இந்த கூடுதல் வேலைநாட்கள் வழங்கப்படவுள்ளன. மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்கள், பெண்களைத் தலைவராகக் கொண்ட குடும்பங்கள், எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட 6 நலிவுற்ற பிரிவினருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இந்த ‘வெற்றி 150’ திட்டத்தின் மூலமாக, 125 நாட்கள் வேலையை முழுமையாக முடித்துள்ள தகுதியான ஏழைக் குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் வேலைவாய்ப்பு கிடைப்பதன் மூலம் மொத்தம் 150 நாட்கள் வேலை உறுதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் இத்திட்டத்திற்கான ஒரு நாள் ஊதியம் ₹345 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இந்த கூடுதல் 25 நாட்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ₹8,625 வரை கூடுதல் வருமானம் நேரடியாகக் கிடைக்கும். கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய குடும்பத் தலைவிகள் மற்றும் நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் பொருளாதாரப் பாதுகாப்புக்கும் இத்திட்டம் மிக முக்கியப் பங்காற்றும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மத்திய அரசால் அண்மையில் VB-G RAM-G திட்டமாக மாற்றப்பட்ட சூழலில், தவெக இந்த 150 நாட்கள் வேலைவாய்ப்புக்கான ‘வெற்றி 150’ முன்முயற்சியை விரிவுபடுத்தி அரசாணையாக வெளியிட்டுள்ளது. கிராமப்புற உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த அரசாணையையும், இதன் மூலம் கிராமப்புறப் பெண்களுக்குக் கிடைக்கவிருக்கும் கூடுதல் நிதிப் பலன்களையும் தமிழக வெற்றிக் கழகத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிர்ந்து, தங்களது அரசியல் வெற்றியாகக் கொண்டாடி டிரெண்ட் செய்து வருகின்றனர்.
