“அம்மா என்னால முடியல..” தாயிடம் அழுது புலம்பிய மகள்.. திருமணமான 4 மாதத்தில் புதுப்பொண் எடுத்த விபரீத முடிவும்.. கணவனின் கொடூர சித்திரவதை.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அம்மா என்னால முடியல..” தாயிடம் அழுது புலம்பிய மகள்.. திருமணமான 4 மாதத்தில் புதுப்பொண் எடுத்த விபரீத முடிவும்.. கணவனின் கொடூர சித்திரவதை.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, திருமணமான நான்கே மாதங்களில் ராஜேஸ்வரி என்ற 27 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் எல்.எல்.பி படித்துள்ள தீபக் என்பவருக்கும், எம்.பி.ஏ பட்டதாரியான ராஜேஸ்வரிக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணமான முதல் மாதம் மகிழ்ச்சியாக வாழ்ந்த நிலையில், அதன் பிறகு ராஜேஸ்வரியின் நடத்தையில் தீபக் சந்தேகப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது செல்போனைப் பறித்து வைத்துக் கொண்டு மனரீதியாகத் துன்புறுத்தியதால், ராஜேஸ்வரி இதுகுறித்து தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். அதற்கு அவரது தாயார், குடும்பப் பிரச்சினைகளைப் பொறுமையாகக் கையாளுமாறு மகளுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

Advertisement

சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு தீபக் வேலைக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் ராஜேஸ்வரி அறையை விட்டு வராததால், கதவை உடைத்துப் பார்த்தபோது அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சோமங்கலம் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரித்து வரும் நிலையில், திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in