LATEST NEWS
“எதிர்க்கட்சிகளைச் சமாளிக்க உதயநிதிக்கு இன்னும் பக்குவம் தேவை” அதேபோல ஆதவ் அர்ஜுனாவுக்கு… உதயநிதி, ஆதவ் அர்ஜுனாவுக்கு டோஸ் விட்ட ஜோஸ் சார்லஸ் மார்டின்..!!
சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை, லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், புதிய அரசு பொறுப்பேற்றது முதல் தற்போது வரை மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகப் பாராட்டிப் பேசினார்.
அரசுக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்த அதே வேளையில், சில முக்கிய அரசியல் தலைவர்களின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும், அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் குறித்தும் தனது கருத்துக்களை அவர் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, சட்டமன்றத்தில் பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்துத் தொடர்ந்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் இந்தச் சந்திப்பில் வலியுறுத்தினார்.
மேலும், உதயநிதி ஸ்டாலின் எதிர்கட்சிகளை எதிர்கொள்ளும்போது கூடுதல் தீவிரத்துடனும், இன்னும் சற்று பக்குவத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பல்வேறு தொழில்களில் இருந்து தற்போதுதான் வெளியே வந்திருக்கிறார் எனக் குறிப்பிட்ட அவர், உதயநிதியும் ஆதவ் அர்ஜுனாவும் பொதுவெளியில் பேசும்போது கூடுதல் பக்குவத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தனது எதிர்பார்ப்பைத் தெரிவித்தார்.
