“குஷியில் மது பிரியர்கள்… இனி ஒரு பாட்டில் வாங்கினாலும் ரசீது கட்டாயம்..!டாஸ்மாக்கிற்கு உயர் நீதிமன்றம் அதிரடி செக்..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“குஷியில் மது பிரியர்கள்… இனி ஒரு பாட்டில் வாங்கினாலும் ரசீது கட்டாயம்..!டாஸ்மாக்கிற்கு உயர் நீதிமன்றம் அதிரடி செக்..!!”

Published

on

தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் அனைத்து மதுபாட்டில்களுக்கும் ரசீது வழங்கப்பட வேண்டும் எனவும், அனைத்து கடைகளும் ரசீது புத்தகங்களை பராமரிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை முழுவதும் உள்ள 30-க்கும் மேற்பட்ட சில்லறை மதுபானக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக வழக்கறிஞர் தேவரஜன் என்பவர் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை விசாரித்தபோது, நீதிபதி ஜி.கே. இளந்திரையன் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். மேலும், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தியது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Advertisement

இந்த நடவடிக்கையின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட கூடுதலாக 10 ரூபாய் அல்லது அதற்கு மேல் வசூலிக்கும் முறைகேடுகள் தடுக்கப்படும். மதுபானங்களின் சரியான விலை மற்றும் விவரங்கள் நுகர்வோருக்குத் தெளிவாகத் தெரியவருவதுடன், கூடுதல் விலைக்கு விற்கும் ஊழியர்கள் மீது பெறப்படும் புகார்களுக்கு இந்த ரசீதுகள் முக்கிய ஆதாரமாக விளங்கும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in