BUGJET BREAKING: தமிழகம் முழுவதும் 10,000 பள்ளிகளுக்கு ஜாக்பாட்.. பட்ஜெட்டில் நிதி அமைச்சர் மாஸ் அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BUGJET BREAKING: தமிழகம் முழுவதும் 10,000 பள்ளிகளுக்கு ஜாக்பாட்.. பட்ஜெட்டில் நிதி அமைச்சர் மாஸ் அறிவிப்பு..!!

Published

on

தமிழகப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் தூய்மையை மேம்படுத்தும் நோக்கில், முதல்கட்டமாக 10,000 அரசுப் பள்ளிகளில் ‘சூப்பர் கிளீன் திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் மரிய வில்சன் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்தச் சிறப்பான திட்டத்திற்காகத் தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டில் ₹139 கோடி நிதியை பிரத்தியேகமாக ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் 10,000 பள்ளிகளிலும் உள்ள வகுப்பறைகள், கழிப்பறைகள் மற்றும் பள்ளி வளாகங்கள் அனைத்தும் நவீன வசதிகளுடன் தூய்மைப்படுத்தப்பட்டு, மாணவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான கற்றல் சூழல் உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக அரசு கல்வித் துறைக்கு அளித்து வரும் முக்கியத்துவத்தின் ஒரு பகுதியாகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்த ‘சூப்பர் கிளீன் திட்டம்’ பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in