LATEST NEWS
TN BUDJET: 2026-க்குள் வறுமையில்லாத தமிழ்நாடு.. 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு – நிதி அமைச்சர் பட்ஜெட்டில் மாஸ் அறிவிப்பு..!!
“தமிழ்நாட்டில் வறுமையே இல்லாத நிலையை உருவாக்குவதற்காக, வரும் 2026ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரத்தை 1.5 ட்ரில்லியன் டாலர் அளவிற்கு உயர்த்துவதே தவெக அரசின் முதன்மை இலக்கு” என்று நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் உரையில் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த இமாலய இலக்கை அடைவதற்காகப் புதிய தொழில் முதலீடுகள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் அரசு கூடுதல் கவனம் செலுத்தவுள்ளது என்றும் அவர் தனது உரையில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய நிதி அமைச்சர், தொலைநோக்கு உத்திகள் மூலம் தமிழகத்தின் அனைத்துத் துறைப் பொருளாதார வளர்ச்சியையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தவெக அரசு திட்டமிட்டுள்ளது என்றார். ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதோடு, வறுமைக் கோட்டிற்கு கீழ் யாரும் இல்லாத ஒரு முன்மாதிரி மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்ற முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த அரசு மிக உறுதியாகச் செயல்படும் என்றும் சட்டமன்றத்தில் அவர் எடுத்துரைத்தார்.
