TN BUDJET 2026: அரசு மருத்துவமனையில் பிறகும் குழந்தைகளுக்கு தங்கம்.. ரூ.560 கோடி அள்ளிவீசிய முதலமைச்சர் விஜய் அரசு..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

TN BUDJET 2026: அரசு மருத்துவமனையில் பிறகும் குழந்தைகளுக்கு தங்கம்.. ரூ.560 கோடி அள்ளிவீசிய முதலமைச்சர் விஜய் அரசு..!

Published

on

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் புதிய திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும் என்று நிதி அமைச்சர் மரிய வில்சன் தனது பட்ஜெட் உரையில் அதிரடியாக அறிவித்துள்ளார். தவெக அரசின் இந்த முதல் பட்ஜெட்டை இன்று சட்டசபையில் தாக்கல் செய்து பேசிய அவர், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தங்க மோதிரத் திட்டத்திற்காக மட்டும் ₹560 கோடி நிதியை அரசு பிரத்தியேகமாக ஒதுக்கீடு செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்களையும் அவர்களது குழந்தைகளையும் கௌரவிக்கும் வகையிலும், அவர்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பயன்படும் வகையிலும் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தவெக அரசு தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்த மிக முக்கியமான அறிவிப்புகளில் ஒன்றான இந்தத் தங்க மோதிரத் திட்டம், பொதுமக்களிடையேயும் குறிப்பாகப் பெண்கள் மத்தியிலும் தவெக அரசுக்கு மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுத் தந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in