BREAKING: இனி பழைய மாடல் இல்ல, எல்லாமே மாடர்ன்.. பள்ளி மாணவர்களுக்கு ‘நவீன சைக்கிள்’ தரும் தவெக பட்ஜெட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: இனி பழைய மாடல் இல்ல, எல்லாமே மாடர்ன்.. பள்ளி மாணவர்களுக்கு ‘நவீன சைக்கிள்’ தரும் தவெக பட்ஜெட்..!!

Published

on

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புதிய உள்கட்டமைப்பு மற்றும் வடிவமைப்புடன் கூடிய ‘நவீன சைக்கிள்கள்’ வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை நிதி அமைச்சர் மரிய வில்சன் தனது பட்ஜெட் உரையில் வெளியிட்டுள்ளார். இதற்காக ரூ.277 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் தினசரி பயணத்தை எளிதாக்கவும், அவர்களின் கல்வியைத் தடையின்றித் தொடர ஊக்குவிக்கவும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

கடந்த காலங்களில் வழங்கப்பட்ட பாரம்பரிய சைக்கிள்களுக்கு மாற்றாக, தற்போதைய நவீன தலைமுறை மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, கூடுதல் பாதுகாப்பு மற்றும் தரமான வசதிகளுடன் இந்த நவீன சைக்கிள்கள் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட உள்ளன. பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளின் நீண்ட நாள் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டில் வெளியிட்டுள்ள இந்தத் திட்டம், பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in