LATEST NEWS
FLASH: கல்லூரி மாணவர்களுக்கு ஜாக்பாட்..! ‘வெற்றி மடிக்கணினி திட்டம்’ திட்டத்திற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு…!!
தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில், முந்தைய அதிமுக மற்றும் திமுக ஆட்சிகளைப் போல தவெக ஆட்சியிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகியுள்ளது. சட்டமன்றத்தில் இன்று தவெக அரசின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் மரிய வில்சன், இந்த புதிய ‘வெற்றி மடிக்கணினி திட்டம்’க்காக ₹2,000 கோடி நிதியை அரசு பிரத்தியேகமாக ஒதுக்கீடு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட கொரோனா பரவலுக்குப் பிறகு, மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்கும் திட்டம் போதிய நிதி ஒதுக்கீடு மற்றும் உள்கட்டமைப்பு குறைபாடுகளால் தமிழகத்தில் முறையாகச் செயல்பாட்டில் இல்லாமல் முடங்கிப் போயிருந்தது. இந்தச் சூழ்நிலையில், தற்போதைய டிஜிட்டல் கல்வித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, கல்லூரி மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதற்காக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு இந்தத் திட்டத்தை மீண்டும் புதுப்பித்து ₹2,000 கோடியை அள்ளிவீசியுள்ளது கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
