கண்ணுல இருந்து கூட தான் தண்ணி வரும்… நாம் சிறுநீர் கழிப்பதை கூட… இது எதார்த்தமான பேச்சு தானே… காயத்ரி ரகுராம் கொடுத்த புதுவித விளக்கம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கண்ணுல இருந்து கூட தான் தண்ணி வரும்… நாம் சிறுநீர் கழிப்பதை கூட… இது எதார்த்தமான பேச்சு தானே… காயத்ரி ரகுராம் கொடுத்த புதுவித விளக்கம்..!!

Published

on

அதிமுக நிர்வாகி காயத்ரி ரகுராம் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், நியாயம் இருக்கும் பட்சத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டுமன்றி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கும் தம்மால் ஆதரவு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். எந்தவொரு நபராக இருந்தாலும் தமக்கு இதே நடுநிலையான நிலைப்பாடுதான் என்றும், தற்போதைய அரசியல் சூழலில் இரட்டை அர்த்தத்தில் பேசுவது சட்டப்படி தவறு என்று கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில், ஒரு குறிப்பிட்ட வார்த்தையை அவர் என்ன அர்த்தத்தில் பேசினார் என்பதை யாராலும் உறுதியாகத் தெரிந்துகொள்ள முடியாது என விளக்கியுள்ளார்.

கண்கள் இருந்தால்தான் தண்ணீர் /கண்ணீர் வரும் என்பதே இயல்பான பேச்சுவார்த்தை வடிவம் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், ஆனால் தவெக கட்சி சிறிய குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்குத் தவறான கருத்துகளைப் போதித்து, அனைவரையும் வேறு விதமாகச் சிந்திக்கச் செய்கிறதோ என்று தமக்குத் தோன்றுவதாகக் கூறியுள்ளார். மேலும், வாயிலிருந்து வரும் எச்சில் அல்லது ஜொள்ளு என்பது “தண்ணி” அல்ல என்றும், நாம் சிறுநீர் கழிப்பதை இயல்பாக யூரின் என்றுதான் குறிப்பிடுவோம் என்றும் தனது பதிவில் விளக்கமளித்துள்ளார்.

Advertisement

உதயநிதி ஸ்டாலின் மற்றவர்களைப் பற்றிப் பல சந்தர்ப்பங்களில் தவறாகப் பேசியிருந்த போதிலும் அவர் மீது கைது நடவடிக்கை பாயவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதே நேரத்தில், தற்போது விஜய் மீது எடுக்கப்பட்டுள்ள கைது நடவடிக்கை முற்றிலும் பழிவாங்கும் நோக்கத்துடனும், எந்தவித அர்த்தமற்ற செயலாகவும் தனக்குத் தோன்றுவதாகக் கூறி காயத்ரி ரகுராம் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in