“ரூ.45,000 ஃபிட்னஸ் வாட்ச்… 2 மாத சம்பளம் காலி” எளிமையா..? ஆடம்பரமா..? தவெக அமைச்சர் ரமேஷின் ஆடம்பர மோகத்தால் வெடித்த சர்ச்சை..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ரூ.45,000 ஃபிட்னஸ் வாட்ச்… 2 மாத சம்பளம் காலி” எளிமையா..? ஆடம்பரமா..? தவெக அமைச்சர் ரமேஷின் ஆடம்பர மோகத்தால் வெடித்த சர்ச்சை..!!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் ரமேஷ், தனது உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்தி வருவது தற்போது அரசியல் களத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அவர் தன் கையில் அணிந்துள்ள அதிநவீன உடற்பயிற்சி கண்காணிப்புக் கருவி பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அமைச்சர் ரமேஷ் பயன்படுத்தி வரும் அந்த ‘ஊப்’ (WHOOP) ஃபிட்னஸ் டிராக்கர் கருவியின் சந்தை விலை சுமார் ரூ.45,000-க்கும் அதிகம் என்பதால், அது பொதுமக்களின் பார்வையை சட்டென்று ஈர்த்துள்ளது.

மேலும், இந்தச் சாதனத்தைப் பயன்படுத்துவதற்கு மட்டுமே ஆண்டிற்கு சுமார் 400 டாலர்கள் வரை சந்தாக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தனது இரண்டு மாத ஊதியத்திற்கு இணையான ஒரு தொகையை ஒரே ஒரு ஃபிட்னஸ் கருவிகாக அவர் செலவிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், அவரது குடும்பத்தின் பிற செலவுகளை அவர் எவ்வாறு சமாளிக்கிறார் எனப் பல தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Advertisement

மக்கள் பிரதிநிதிகளின் எளிமையான வாழ்க்கையும், அவர்களின் ஆடம்பரப் பயன்பாடுகளும் உரசிப் பார்க்கப்படும்போதெல்லாம், இது போன்ற விலையுயர்ந்த நவீன சாதனங்கள் மீதான ஈர்ப்பு பெரும் கவனத்தைப் பெறுவது இயல்பான ஒன்றாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in