என்னடா இது..! “வந்த முதல் நாளே இப்படி பேசுறாரு” விஜயபாஸ்கர் விடுத்த பகிரங்க சவால்.. மேடையிலேயே முகம் மாறிய தவெக அமைச்சர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னடா இது..! “வந்த முதல் நாளே இப்படி பேசுறாரு” விஜயபாஸ்கர் விடுத்த பகிரங்க சவால்.. மேடையிலேயே முகம் மாறிய தவெக அமைச்சர்கள்..!!

Published

on

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்ற மிழக வெற்றிக் கழகத்தின் பிரம்மாண்ட இணைப்பு விழாவில், அக்கட்சியில் புதிய வரவாக இணைந்துள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பேசிய பேச்சு மேடையில் இருந்த தவெகவின் மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே திடீர் சலசலப்பையும், முக மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டைப் போன்ற பிரம்மாண்ட சூழலில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசிய சி. விஜயபாஸ்கர், “இங்கே கூடியிருக்கும் இந்த மாபெரும் கூட்டம் என்பது வெறும் ‘ட்ரைலர்’ தான்; உண்மையான ‘மெயின் பிக்சரை’ நாங்கள் டெல்டா மண்ணில் காட்டப் போகிறோம்” என்று அதிரடியாக முழங்கினார்.

புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இருந்து சுமார் 20,000-க்கும் மேற்பட்ட தொண்டர்களைத் திரட்டி வந்து தவெகவில் இணைத்துள்ள சி. விஜயபாஸ்கர், தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவிடம் மேடையிலேயே ஒரு முக்கியக் கோரிக்கையை வைத்தார். “பொதுச்செயலாளர் அவர்களே, நீங்கள் தலைமையிடம் முறைப்படி அனுமதி வாங்கித் தாருங்கள்; அடுத்த சில வாரங்களிலேயே ஒட்டுமொத்த தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் வகையில், டெல்டா மண்ணில் இதைவிடப் பல மடங்கு பிரம்மாண்டமான இரண்டாவது மாபெரும் இணைப்பு விழாவை நாங்கள் நடத்திக் காட்டுகிறோம்” என்று பகிரங்கமாகச் சவால் விடுத்தார்.

Advertisement

அதிமுகவில் இருந்து விலகி, தனது விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த முதல் நாளே, கட்சியின் மூத்த நிர்வாகிகளைக் கலந்தாலோசிக்காமல் அடுத்த பிரம்மாண்ட விழா மற்றும் அதற்கான திட்டங்கள் குறித்து விஜயபாஸ்கர் தன்னிச்சையாக மேடையில் அறிவித்தது அங்கிருந்த தவெக அமைச்சர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஏற்கனவே கட்சியில் நீண்ட நாட்களாக உழைத்து வரும் சீனியர் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களைத் தாண்டி, புதிதாக வந்த ஒரு மாற்றுக்கட்சித் தலைவர் அசுர வேகத்தில் மேடையைக் கைப்பற்றி அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளைத் தீர்மானிப்பது போல் பேசியதே அமைச்சர்களின் முகம் மாறியதற்குக் காரணம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in