LATEST NEWS
ஒரே வீட்டில் இரண்டு ரேஷன் கார்டு இருந்தால்.. மகளிர் உரிமைத்தொகை ரூ.2500…? வருகிறது முக்கிய மாற்றம்..!!
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவதற்கு முன்பாக, தகுதியான பயனாளிகளைக் கண்டறிய அரசு சில முக்கிய நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக தாவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏற்கனவே இத்தொகையைப் பெற்று வரும் பெண்களின் விவரங்கள் மற்றும் ஆவணங்கள் தற்போது தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன.
முக்கியமாக, ஒரே வீட்டில் இரண்டு ரேஷன் கார்டுகளைப் பயன்படுத்தி இரண்டு பெண்கள் தனித்தனியாக உரிமைத் தொகை பெற்று வருவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட உள்ளது. மேலும், இந்த உதவித்தொகைக்கான தகுதிப் பட்டியலை முறைப்படுத்தவும், தகுதியற்றவர்களை நீக்கவும் புதிய விதிமுறைகளைச் சேர்ப்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக இந்தச் செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.
