LATEST NEWS
அதிர்ச்சி!.. திடீரென சரிந்து விழுந்த 500 கிலோ இரும்பு கேட்.. இரத்த வெள்ளத்தில் மிதந்த 4 மாணவர்கள்.. கர்நாடகா அரசு பள்ளியில் நடந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
கர்நாடக மாநிலம் பாலகண்டி கிராமத்தில் உள்ள அரசு உயர் தொடக்கப் பள்ளியில், பள்ளியின் பிரதான நுழைவாயில் திடீரென சரிந்து விழுந்ததில் நான்கு மாணவர்கள் படுகாயமடைந்தனர். கேட்டைத் திறக்க முயன்றபோது, அது கீல்களிலிருந்து கழன்று தரையில் விழுந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 5 குவிண்டால் எடை கொண்ட அந்த இரும்பு கேட், நயனா குமாரி என்ற மாணவியின் மீது நேரடியாக விழுந்ததில், அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அந்த மாணவி முதலில் இல்கல் மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக பாகல்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த மற்ற மூன்று மாணவர்களுக்கும் இல்கல் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
https://twitter.com/HateDetectors/status/2074070847279837214/video/1
கடந்த ஆண்டிலும் இதேபோன்று இந்த பள்ளி கேட் சரிந்து விழுந்ததாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நுழைவாயில் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பது குறித்து பள்ளி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், அதை நிரந்தரமாகச் சீரமைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் இத்தகைய தொடர் அலட்சியப் போக்கே, தற்போது நான்கு மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இந்த விபத்து நேரிடக் காரணமாக அமைந்துள்ளது என அவர்கள் சாடியுள்ளனர்.
