செத்து சுடுகாட்டுக்கு போனாலும் போவேன்… ஆனால் அதை மட்டும் செய்யவே மாட்டேன்.. அதிமுக MLA பரபரப்பு பேட்டி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

செத்து சுடுகாட்டுக்கு போனாலும் போவேன்… ஆனால் அதை மட்டும் செய்யவே மாட்டேன்.. அதிமுக MLA பரபரப்பு பேட்டி..!!

Published

on

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கட்சியின் முக்கியக் கூட்டத்தை, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் புறக்கணித்ததாகத் தகவல்கள் வெளியாயின. இதனால், அவர் ஆளுங்கட்சியான திமுக அல்லது வேறு ஏதேனும் மாற்றுக்கட்சிக்கு மாறக்கூடும் என்ற அரசியல் வதந்திகளும், ஊகங்களும் அரசியல் வட்டாரத்தில் மிகத் தீவிரமாக எழுந்தன. இந்த விவகாரம் தொண்டர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தன் மீதான அரசியல் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் தனது விளக்கத்தை அளித்துள்ளார். கட்சியின் துணைப் பொதுச்செயலாளரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே, தனது மாவட்டத்தில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த அரசு கூட்டத்தில் தான் பங்கேற்றதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் காரணமாகவே கட்சியின் கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும், வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், “சுடுகாட்டுக்குச் சென்றாலும் செல்வேனே தவிர, மாற்றுக்கட்சிக்கு செல்ல மாட்டேன்” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதிமுக தான் எப்போதும் தன் கட்சி என்றும், எடப்பாடி பழனிசாமி தான் கட்சியின் பொதுச்செயலாளர் என்றும், இதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் அவர் உருதியுடன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in