LATEST NEWS
சும்மா எல்லாரும் தர மாட்டேன்… கட்சிக்கு விசுவாசமா இருக்கிறவங்களுக்கே சீட்.. தொண்டர்களுக்கு EPS போட்ட ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்..!!
திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என்று தெரிவித்துள்ளார். அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சகஜமான ஒன்று எனக் குறிப்பிட்ட அவர், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால், மீண்டும் மாநில ஆட்சியை எளிதாகப் பிடித்துவிடலாம் என்று நிர்வாகிகளுக்கு நம்பிக்கை ஊட்டியுள்ளார்.
மேலும், கட்சிக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பவர்களுக்கே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். எனவே, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தகுதியான மற்றும் சரியான நிர்வாகிகளைத் தலைமைக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
