LATEST NEWS
“நாங்க திருப்பி அடிச்சா தாங்க மாட்டீங்க”.. திமுகவை அதிரவைத்த அமைச்சர் வன்னி அரசின் ஓப்பன் வார்னிங்.. அதிரும் அரசியல் களம்..!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுகவினர் எவ்வித ஆலோசனையும் சொல்லத் தேவையில்லை என்று த.வெ.க அரசின் அமைச்சர் வன்னி அரசு மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார். விசிக தங்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டதாகத் திமுகவினர் கூறி வரும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுத்துள்ள அவர், “யார் துரோகம் இழைத்தது? 4 எம்.எல்.ஏ-க்கள் இருந்த போதே எங்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்திருக்க வேண்டும்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், விசிக மற்றும் தங்களது கூட்டணிக்கு எதிராகத் திமுகவினர் அவதூறு பரப்புவது அவர்களின் ஆற்றாமையின் வெளிப்பாடுதான் என்று வன்னி அரசு கடுமையாகச் சாடியுள்ளார். அரசியல் ரீதியாகத் தாங்கள் திருப்பி அடிக்கத் தொடங்கினால் திமுகவினரால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியாது என்று எச்சரித்துள்ள அவர், தேவையற்ற விமர்சனங்களை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தனது பேட்டியில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
